சபரிமலை செல்வதற்காக இளம் பெண்களுக்கு இரு முடி கட்டமாட்டோம்… கூடி முடிவெடுத்த குருசாமிகள்...

By Selvanayagam PFirst Published Oct 12, 2018, 11:53 AM IST
Highlights

சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே செல்ல முடியும். ஆனால் இதைனை எதிர்த்து உச்சநிதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் அனைத்து வயது பெண்களும் அய்யப்பன் கோவிலுக்குள் செல்லாம் என  தீர்ப்பளித்தனர்.

இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பின. கேரளாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் தீர்ப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த முடிவு செய்து அதற்கான ஏறபாடுகளை செய்து வருகிறது.

வரும் 16 ஆம் தேதி முதல் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அய்யப்பன் சீசன் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சி மடத்தில்  அய்யப்ப பக்தர்களின் குருசாமிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் சிவா ஐயப்ப பக்தர்கள் மன்ற குருசாமி எஸ்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் குழுவின் குருசாமிகள் கலந்து கொண்டனர்.

அப்போது , சபரி மலையில் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க வேண்டும். 
பெண்களும் வழிபடலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். 10 வயது முதல் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்டுவதில்லை. 
சபரிமலையின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க வலியுறுத்தி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் நான்கு ரத வீதிகளின் வழியாக நவம்பர் 3 ஆம் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
click me!