சென்னை மெரினா கடற்கரையில் 76வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஆளுநர் ரவி கொடியேற்றி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள், விருதுகள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
76வது குடியரசு தின விழா
76வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பாக சென்னை மெரினா கடற்கரையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. தேசிய கொடியை ஏற்ற வருகை தந்த ஆளுநர் ரவியை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். இதனையடுத்து தமிழக ஆளுநர் ரவி ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் நடனம் உள்ளிட்டவைகளையும் கண்டு ரசித்தார்,
LIVE : 76-ஆம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு
அலங்கார ஊர்தி அணிவகுப்பு
இதனையடுத்து தமிழக அரசின் சாதனை விளக்க அலங்கார ஊர்தியின் அணிவகுப்பையும் ஆளுநர் ரவி பார்வையிட்டார். செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை மங்கல இசை, காவல் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை துறை, பள்ளி கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகளையும் தமிழக அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களையும் அந்த அலங்கார ஊர்தியில் வடிவமைக்கப்பட்டிருந்தது அதனையடுத் ஆளுநர் ரவி பார்வையிட்டு ரசித்தார்.
தமிழக அரசின் விருது
இதனையடுத்து தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் வழங்கப்படும் விருது இந்த ஆண்டு இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ் ஏ அமீர் அம்சா அவர்களுக்கு வழங்கப்பட்டது. 76 வது குடியரசு தின விழாவில், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு வீரரான வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது முதல் பரிசு மதுரை மாநகரத்தை சேர்ந்த c3 எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு திருப்பூர் மாநகரம் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டம் மாவட்டத்தை சேர்ந்த திருத்தணி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.