குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக அரசு வீரதீர செயலுக்கான பதக்கம், மத நல்லிணக்க விருது, நெல் உற்பத்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. காவல்துறை, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிறந்த காவல் நிலையங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
76வது குடியரசு தின விழா
குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கொடியேற்றி வைக்கவுள்ளார். இதே போல அந்த அந்த மாநிலங்களில் மாநில ஆளுநர்கள் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவார்கள். இதன் படி தமிழகத்தில் ஆளுநர் ரவி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து விருதுகளை வழங்கவுள்ளார். இந்த நிலையில் யார், யாருக்கெல்லாம் விருது வழங்கப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் விருதுகள்
குடியரசு தின விழாவையொட்டி தமிழக அரசு சார்பாக வீர தீர செயலுக்கான பதக்கம், மத நல்லிணக்கத்திற்கான விருது. நெல் உற்பத்தி திறுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் க. வெற்றிவேல், தீயணைப்பு துறை, சென்னை மாவட்டம் வழங்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி அடையாறு எம் ஜி எம் மலர் மருத்துவமனை அருகே அடையாறு ஆற்றில் மூன்று பேர் உயிருக்கு போராடிய நிலையில், முன்னணி தீ அணைப்பாளரான வெற்றிவேல் தலைமையிலான குழு, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆதிகேசவன், குமார், மற்றும் செல்வியை காப்பாற்றினர்.இதனையடுத்து இந்த விருது வெற்றி வேலுக்கு வழங்கப்பட்டது.
மத நல்லிணக்கத்திற்காண கோட்டை அமீர் விருது இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ் ஏ அமீர் அம்சாவிற்கு வழங்கப்பட்டது. அமீர் அம்சா, அப்பாஸ் அலி டிரஸ்ட் என்ற பெயரில் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டும், இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்ரவர்களின் பிரேதங்களை சாதி மத பேதமின்றி காவல்துறையின் உதவியுடன் இலவசமாக நல்லடக்கம் செய்து வருகிறார்.
யாருக்கெல்லாம் விருதுகள்
அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தேனி மாவட்டத்தை சேர்ந்த ரா.முருகவேலுக்கு வழங்கப்படுகிறது. காந்தியடிகள் காவலர் பதக்கம் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் கே சின்னகாமணனுக்கும். மகா மார்க்ஸ், காவல் நிலைய தலைமை காவலர், விழுப்புரம் தாலுக்கா சட்டம் மற்றும் ஒழுங்கு விழுப்புரம் மாவட்டம், கா கார்த்திக் தலைமை காவலர் துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு திருச்சி மாவட்டம் கா சிவா இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை சேலம் மாவட்டம், பா பூமாலை இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை சேலம் மாவட்டம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த காவல்நிலையம்
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருதை முதல் பரிசு மதுரை மாநகரத்தை சேர்ந்த c3 எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் கே காசி முதலமைச்சர் அவர்களிடம் கோப்பையை பெறுகிறார். இரண்டாம் பரிசு திருப்பூர் மாநகரம் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் என் உதயகுமார் முதலமைச்சர் அவர்களிடம் கோப்பையை பெறுகிறார். மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டம் மாவட்டத்தை சேர்ந்த திருத்தணி காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் மத்திய அரசின் முதலமைச்சர் அவர்களிடம் கோப்பையை பெறுகிறார்