பத்ம விருதுகள் 2025: நடிகர் அஜித் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் தேர்வு!

By SG Balan  |  First Published Jan 25, 2025, 10:23 PM IST

2025 குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜித் உள்பட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.


2025 குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் அஜித் உள்பட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சாதனைகள் புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளாக பத்ம விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டும் கலை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் சீரிய முறையில் பங்களித்த 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Latest Videos

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் பின்வருமாறு:

பத்ம பூஷன் விருதாளர்கள்:

திரு. நல்லி குப்புசுவாமி செட்டி / வர்த்தகம் மற்றும் தொழில் / தமிழ்நாடு
திரு. எஸ் அஜித் குமார் / கலை / தமிழ்நாடு
திருமதி ஷோபனா சந்திரகுமார் / கலை / தமிழ்நாடு

பத்மஸ்ரீ விருதாளர்கள்:

திரு. குருவாயூர் துரை / கலை / தமிழ்நாடு
திரு. கே. தாமோதரன் / சமையல் / தமிழ்நாடு
திரு. லக்ஷ்மிபதி ராமசுப்பையர் / இலக்கியம், கல்வி, பத்திரிகை / தமிழ்நாடு
திரு. எம். டி. ஸ்ரீனிவாஸ் / அறிவியல் மற்றும் பொறியியல் / தமிழ்நாடு
திரு. புரிசை கண்ணப்ப சம்பந்தன் / கலை / தமிழ்நாடு
திரு. ஆர். அஸ்வின் / விளையாட்டு / தமிழ்நாடு
திரு. ஆர். ஜி. சந்திரமோகன் / வர்த்தகம் மற்றும் தொழில் / தமிழ்நாடு
திரு. ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி / கலை / தமிழ்நாடு
திரு. சீனி. விஸ்வநாதன் / இலக்கியம் மற்றும் கல்வி / தமிழ்நாடு
திரு. வேலு ஆசான் / கலை / தமிழ்நாடு
திரு. பி. தட்சணாமூர்த்தி / கலை / புதுச்சேரி

click me!