புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தவில் வாசித்து வரும் இவர், 15,000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
2025 குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த தவில் இசை கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய இசை மற்றும் கலாச்சாரத்தில் இன்றியமையாத பாரம்பரிய தாள வாத்தியமான தவில் இசையில் நிபுணத்துவம் பெற்ற இசைக்கலைஞர் தட்சிணாமூர்த்தி.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தவில் வாசித்து வரும் தட்சிணாமூர்த்தி 15 வயதிலிருந்தே, இந்தியா முழுவதும் 15,000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தவில் இசையின் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
68 வயதான பி. தட்சிணாமூர்த்தியின் தவில் இசை நுட்பங்கள் பரவலான பாராட்டைப் பெற்றவை. தவில் வாசிப்பிலும் கற்பித்தலிலும் தட்சிணாமூர்த்தியின் புதுமையான அணுகுமுறைகள் இசை உலகில் மிகவும் பெயர் பெற்றவை. தவில் இசையைப் பரவலாக்குவது, தவில் கலைஞர்களின் சமூக மேம்பாடு ஆகியவற்றில் தட்சிணாமூர்த்தியின் பங்களிப்பு முக்கியமானது.
விண்வெளியில் அணிவகுப்பு நடத்தும் 6 கோள்கள்! அபூர்வ வானியல் நிகழ்வு!!
தட்சிணாமூர்த்தியின் தவில் இசை இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அம்சத்தைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், பெரிய அளவில் தவில் இசையின் வளர்ச்சி மற்றும் அங்கீகாரத்திற்கும் வழிவகுத்திருக்கிறது.
இந்த ஆண்டு, பத்ம விருதுகளில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் எட்டு ஆளுமைகள் பத்ம விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த பறை இசை கலைஞர் வேலு ஆசான் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ளார். இரண்டு புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர்கள் பத்ம விபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.
அரிசிக்குப் பதில் பணம்! குடும்ப அட்டைதாரர்களுக்கு புதுச்சேரி அரசின் குட் நியூஸ்!