பேருந்து கட்டணம் கிடு கிடுவென உயர்வு.! அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு ஷாக் கொடுத்த அரசு

By Ajmal Khan  |  First Published Dec 20, 2024, 7:32 AM IST

 AC மற்றும் Non-AC பேருந்துகளின் கட்டணம் உயர்வு. குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 7 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 36 ரூபாயிலிருந்து 47 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. கி.மீ கட்டணமும் உயர்வு.


பேருந்து கட்டணம் உயர்வு

பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது அரசு பேருந்தாகும். அந்த வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல அரசு பேருந்தில் மட்டுமே குறைவான கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.எனவே பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் முதல் ஏழை எளிய மக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரி அரசு பேருந்து கட்டணத்தை கிடு கிடுவென உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் படி கடந்த 2018ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை நிலை ஆளுநரின் கைலாஷ்நாதன் உத்தரவையடுத்து போக்குவரத்து துறை கூடுதல் செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதில் 

Latest Videos

பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்வு.?

  • AC வசதியில்லாத நகரப் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 7 ரூபாயாகவும்,  அதிகபட்சமாக 13 ரூபாயில் இருந்து  17 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
  • AC வசதியுடன் கூடிய பேருந்துகளில் குறைந்தபட்சம் 10 ரூபாயில் இருந்து 13 ரூபாயாகவும், அதிகபட்சமாக 26 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும் அதிகரிப்பட்டுள்ளது. 
  • DELUXE பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் 12 ரூபாயில் இருந்து  16 ரூபாயாகவும், அதிகபட்சமாக 36 ரூபாயில் இருந்து 47 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 
  • புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசாவானது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.  25 கி.மீ தூரம் உள்ள இடங்களுக்கு 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரிப்பட்டுள்ளது. 

அதிகரிக்கப்பட்ட கட்டணம்

  • புதுச்சேரி எல்லைக்குள் AC விரைவுப் பேருந்துக் கட்டணம் கி.மீட்டருக்கு 1.30- ரூபாயில் இருந்து 1.69 ரூபாயாக உயர்ந்துள்ளது.  
  • புதுச்சேரி நகரத்திற்குள் VOLVO பேருந்துகளுக்கான கட்டணம் கி.மீ.,க்கு 1.70 ரூபாயில் இருந்து 2.21 ரூபாயாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. 
  • புதுச்சேரியிரிலிருந்து கடலூருக்கான கட்டணம் 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும், விழுப்புரத்திற்கு 25 ரூபாயில் இருந்து 30 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 
     
click me!