அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு...!

Published : Jan 13, 2019, 03:34 PM IST
அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு...!

சுருக்கம்

ஓமலூர் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மையத்தில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு அளித்த லேப் டெக்னீசியன் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஓமலூர் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை மையத்தில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு அளித்த லேப் டெக்னீசியன் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு பெண் ஒருவர் அவரது குழந்தையுடன் மருத்தவமனைக்கு சென்றுள்ளார். குழந்தைக்கு அதிகப்படியான காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதனையடுத்து ரத்து பரிசோதனை மையத்துக்கு குழந்தையுடன் ரத்தம் கொடுக்க தாய் மற்றும் கணவர் சென்றனர். 

அப்போது ரத்த பரிசோதனை மையத்தில் இருந்த லேப் டெக்னீசியன் யோகநாத் அந்த பெண்ணிக் கணவரை வெளியே இருக்கும் படி கூறியுள்ளார். கணவர் சென்றுவிட்ட நிலையில் குழந்தைக்கு பரிசோதனை செய்வது போல தாயிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெண் அலறிய கொண்டு வெளியே வந்து கணவரிடம் நந்ததை பற்றி கூறியுள்ளார். உடனே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து லேப் டெக்னீசியன் யோகநாத்தை தர்ம அடிகொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து லேப் டெக்னீசியன் யோகநாத்தை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர் ஏற்கனவே பலமுறை பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யோகநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?