சேலத்தில் அடுத்தடுத்து 6 பைக்குகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்...!

Published : Dec 24, 2018, 05:13 PM IST
சேலத்தில் அடுத்தடுத்து 6 பைக்குகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்...!

சுருக்கம்

சேலம் கோட்டை பெருமாள் கோவில் பின் பகுதி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் கவுதீப்முகைன். இவருக்கு சொந்தமான பைக்கை தினமும வீட்டின் முன் நிறுத்துவது வழக்கம். இதையொட்டி நேற்று இரவு வழக்கம் போல கவுதீப்முகைன் பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

சேலம் கோட்டை பெருமாள் கோவில் பின் பகுதி சின்னசாமி தெருவை சேர்ந்தவர் கவுதீப்முகைன். இவருக்கு சொந்தமான பைக்கை தினமும வீட்டின் முன் நிறுத்துவது வழக்கம். இதையொட்டி நேற்று இரவு வழக்கம் போல கவுதீப்முகைன் பைக்கை நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் புகை வாசனை வந்தது. இதனால், திடுக்கிட்டு எழுந்த அவர், சமையல் அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்து ஸ்டவ் அணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர், வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது, வீட்டின் முன் நிறுத்திய அவரது பைக் தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அலறி கூச்சலிட்ட அவர்,  தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.

 

அப்போது அதே பகுதியில் சில வீடுகளை கடந்து ஒரு டிரான்ஸ்பார்மரின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 பைக்குகள், ஒரு சைக்கிளும் தீப்பற்றி எரிவதை கண்டு திடுக்கிட்டார். அதிகாலை 2.30 மணி என்பதால் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரகமத்துல்லா, சர்தீன், சுல்தான், முபாரக், சானாஷ் மற்றும் சைக்கிள் உரிமையாளரான ரி‌ஷன் (19) மற்றும் அவர்களது உறவினர்கள் அலறியடித்து  கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால், அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் அனைத்து பைக்குகளும் எரிந்து நாசமாயின. இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர்கள் கதறினர். மேலும் மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி பைக்குகளுக்கு தீ வைத்ததாக அவர்கள் புகார் கூறினர்.

தகவலறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனர். அப்போது, அப்பகுதி மக்கள், பைக்குகளுக்கு தீ வைத்த மர்மநபர்களை உடனே பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில், மர்மநபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா என விசாரிக்கிக்னறனர். சேலம் மாநகரின் முக்கிய பகுதியான கோட்டையில் ஒரே நேரத்தில் 6 பைக், மற்றும் ஒரு சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

PREV
click me!

Recommended Stories

சேலத்தில் பரபரப்பு! திமுக பிரமுகர் சுட்டுக்கொ*லையால் அதிர்ச்சி!
35 வயதில் பலான வேலையை செய்து விட்டு 60 வயதில் சிக்கிய நல்லதம்பி! 25 வருஷத்துக்கு பின் பிடிப்பட்டது எப்படி?