கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு!

By vinoth kumar  |  First Published Dec 24, 2018, 4:20 PM IST

கடன் தொல்லை தாங்க முடியாத கூலி தொழிலாளி, குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை, போலீசார் மீட்டனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கடன் தொல்லை தாங்க முடியாத கூலி தொழிலாளி, குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை, போலீசார் மீட்டனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநிலம் முழுவதும் உள்ள கலெக்டர்  அலுவலகங்களில் இன்று மக்கள் குறை தீர்க்கும் மனுநீதி நாள் கூட்டம் நடந்தது. இதில், ஏராளமான மக்கள் பட்டா பெயர் மாற்றம், இலவச பட்டா, முதியோர் உதவி தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் கூட்டம் நடந்தது. அதிகாரிகள், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்று, அதனை பரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர். இதையொட்டி, சேலத்தில்வசிக்கும் கூலி தொழிலாளி ஒருவர், தனது மனைவி, 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி கொண்டு, குடும்பத்தினர் மீது ஊற்றி தீ வைக்க முயன்றார். 

இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றி, தற்கொலையை தடுத்தனர். இதையடுத்து போலீசார், அவரை தனியே அழைத்து சென்று விசாரித்தனர். அதில், வேலை செய்வதற்கு வழியில்லாமல், சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள், கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால், அவர் தீக்குளிக்க முயற்சித்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், உயர் அதிகாரிகளுக்கு இதுறித்து தெரிவித்தனர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

click me!