
திருநெல்வேலி மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வந்து தங்களது கல்வி நிலையங்களுக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்து மாணவிகள் வீடுகளுக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மாணவிகளிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு இருந்த ஆசிரியர்கள் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றும், அதை கண்டுகொள்ளாமல் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.மாணவிகள் ஆசிரியர்களின் அன்பாகவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த ஆசிரியைகள் மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றும் அதை கண்டுகொள்ளாமல் மாணவிகள் சண்டை போடுவதில் மும்முரமாக இருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலின்போது, அரை நிர்வாணமாக பிரதான சாலையில் மாணவர் ஒருவர் ஓட விட்டு தாக்கப்பட்ட காட்சிகளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது மாணவிகள் ஆசிரியர்கள் முன்பாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவிகள் ஆசிரியர்கள் முன்பாகவே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !