காதலை ஏற்காத மாணவி.. வாயில் விஷத்தை ஊற்றிய காதலன் - மீண்டும் சூடுபிடித்த வழக்கு !

By Raghupati R  |  First Published Jul 27, 2022, 3:43 PM IST

வாயில் குளிர்பானத்தில் விஷம் கலந்து ஊற்றி விட்டதாகக் கூறி திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வித்யா.


திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மகள் வித்யா லட்சுமி (19). இவர் திருச்சியில் பிரபலமான கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மர்ம நபர்கள் 3 பேர் கடந்த வாரம் இவரது வாயில் குளிர்பானத்தில் விஷம் கலந்து ஊற்றி விட்டதாகக் கூறி திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் வித்யா. சிகிச்சை பலனின்றி வித்யா பரிதாபமாக இறந்து விட்டார். 

Tap to resize

Latest Videos

undefined

வித்யா கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மூன்று பேரையும் போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை எனக்கூறி அவரது குடும்பத்தினர் தொடர்ந்து புகார் கூறிவருகின்றனர். போலீஸ் தரப்பில் இதுபற்றி கூறியதாவது, இந்த வழக்கில் மாணவி வித்யா லட்சுமி விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தின் பகுதியில் உள்ள செல்போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவி சிகிச்சைக்கு சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் மாணவி தற்கொலைக்குதான் தூண்டப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

இதையடுத்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறினர். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுதொடர்பாக கோரிக்கை மனுவினை அளித்தனர். பிறகு பேசிய அவர்கள், தனது மகளின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறி பிரேதத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது ஆட்சியராக இருந்த சிவராசு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். 

இதனால் பிரேதத்தை பெற்று அடக்கம் செய்தோம். ஆனால், தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் கைது செய்யாமல் உள்ளனர் எனவே திருவரம்பூர் சரக டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டால் நியாயம் நீதி கிடைக்காது என்பதால் எனது மகளின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறினர்.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !

click me!