மே 12 வரை காலை 10 மணி முதல் 3 மணி வரையில் வெளியில் செல்ல கூடாது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Published : Apr 29, 2025, 08:38 PM ISTUpdated : Apr 29, 2025, 08:49 PM IST
மே 12 வரை காலை 10 மணி முதல் 3 மணி வரையில் வெளியில் செல்ல கூடாது – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சுருக்கம்

Summer Health Tips to Avoid Heat : வரும் மே 12 ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் பொதுமக்கள் முடிந்த வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Summer Health Tips to Avoid Heat : நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை விட கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும் அளவிற்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது. ஓரிரு நாட்களில் அக்னி நட்சத்திரமும் தொடங்க இருக்கிறது. இந்த சூழலில் மே 12 ஆம் தேதி வரையில் பொதுமக்கள் முடிந்த வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலை 10 மனி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த 14 நாட்களும் வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையில் கூடுதலாக இருக்கும். ஆகையால் யாரேனும் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவர அணுகி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த தடை.! மீறினால் அவ்வளவு தான்- அரசு எச்சரிக்கை

மேலும், வெயிலின் தாக்கம் குறைய எப்போது வீட்டில் இருக்கும் வீட்டு கதை திறந்தே வைக்க வேண்டும். மொபைலை சார்ஜ் போட்டவாறு பயன்படுத்தை தவிர்க்க வேண்டும். இதற்கு காரணம் அறையின் வெப்பநிலை காரணமாக ஏற்கனவே உங்களது மொபைல் சூடாக இருக்கும். அப்படியிருக்கும் போது சார்ஜ் போடும் போது கூடுதல் வெப்பம் காரணமாக மொபை வெடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. வெயிலின் பாதிப்பிலிருந்து தப்பிக்க குளிர் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

எளிதில் பற்றக் கூடிய இவற்றையெல்லாம் காரில் வைக்க கூடாது:

1. எரிவாயு பொருட்கள்

2. லைட்டர்கள்

3. கார்பனேற்றப்பட்ட பானங்கள்

4. வாசனை திரவியங்கள்

5. பேட்டரிகள்

6. காரில் பெட்ரோல் அல்லது டீசலை முழுவதுமாக நிரப்ப கூடாது.

7. காலை நேரங்களில் கார் பயணங்களை தவிர்ப்பது நல்லது

8. கார் டயரில் அதிக காற்று நிரப்ப கூடாது.

9. கார் ஜன்னல்கள் கொஞ்சம் திறந்திருக்க வேண்டும்.

பள்ளியில் சிறப்பு வகுப்பு.! தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி துடிதுடித்து பலி

கவனமாக இருக்க வேண்டும்:

வெயிலின் தாக்கம் காரணமாக ஊர்வன வகையைச் சேர்ந்த தேள், பாம்பு ஆகியவை நீர் நிலைகளை தேடி வெளியில் செல்லும்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்க கூடாது. எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்க கூடாது. மின் மீட்டர்களை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. வீட்டில் தேவைக்கேற்ப மட்டும் ஏசியை பயன்படுத்த வேண்டும். ஏசியை வீட்டில் 24-25 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும். உங்களது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

பள்ளியில் சிறப்பு வகுப்பு.! தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி துடிதுடித்து பலி
 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்