சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. நீண்ட மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பலமுறை நீதிமன்றத்தை நாடிய நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜாமீனில் வந்த வேகத்தில் கெத்தாக அமைச்சராகும் செந்தில் பாலாஜி? எந்த துறை தெரியுமா?
undefined
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து 471 நாள் தண்டனைக்கு பின்னர் மாலை நேரத்தில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவருக்கு அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
மலைக்க வைக்கும் செந்தில் பாலாஜியின் சொத்து; இதுமட்டுமா ரக ரகமா கார், துப்பாக்கி வேற!!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர் உதயநிதிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது போடப்பட்ட பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். என் மீதான பொய் வழக்கில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் பின்ன சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்ற செந்தில் பாலாஜி முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, அண்ணாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.