அரசியல்‌ நாகரீகம்‌ பற்றி உங்க தலைவருக்கு முதலில் பாடம் எடுங்க.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி..

By Thanalakshmi V  |  First Published May 28, 2022, 3:27 PM IST

எதிர்க்கட்சி தலைவர் எப்படி செயல்படும் வேண்டும் என்று பாடம் எடுக்கால் இனி தங்கள் கட்சி தலைவர் பொதுமேடையில் எவ்வாறு நாகரீகமாக பேச வேண்டும் என்று உபதேசம் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் பதிலடிக்கொடுத்துள்ளார்.
 


இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஆந்திர மாநில முன்னாள்‌ முதலமைச்சரின்‌ குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி, ரேஷன் அரசி கடத்தலைத்‌ தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ எடப்பாடி பழனிசாமி ‌ வெளியிட்ட அறிக்கைக்கு, உணவுத்‌ துறை அமைச்சர்‌ சக்கரபாணி பொறுப்பற்ற முறையில்‌ ஒரு பதிலை தந்துள்ளார்‌.

“எதிரிக்‌ கட்சித்‌ தலைவராக செயல்பட வேண்டாம்‌” என்று முன்னாள்‌ முதலமைச்சருக்கு அவர்‌ வேண்டுகோள்‌ விடுத்துள்ளார்‌.
அமைச்சர் சக்கரபாணி அவர்களுடைய தலைவரைப்‌ போல்‌, என்றைக்குமே கழக இணை ஒருங்கிணைப்பாளர்‌ எடப்பாடி பழனிசாமி எதிரிக்‌ கட்சித்‌ தலைவராக செயல்பட்டதில்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித்‌ தலைவராக, இந்த ஆட்சியில்‌ கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்த சட்டம்‌, ஒழுங்கு சீர்கேடு; போதைப்‌ பொருட்கள்‌ கடத்தல்‌; நாள்தோறும்‌ நடைபெறும்‌ படுகொலைகள்‌; கூட்டுப்‌ பாலியல்‌ பலாத்கார குற்றச்‌ சம்பவங்கள்‌; செயின்‌ பறிப்பு; தனியாக வாழும்‌ முதியோர்களை குறிவைத்துத்‌ தாக்குதல்‌ போன்றவைகளை கண்ணியமான முறையில்‌ நாட்டு மக்களிடம்‌ எடுத்து வைத்து வருகிறார்‌.

Tap to resize

Latest Videos

அதே நேரத்தில்‌, பொறுப்புள்ள எதிர்க்கட்சித்‌ தலைவராக எடப்பாடி பழனிசாமி அவர்கள்‌ எப்படி செயல்பட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொண்டுள்ள இந்த உணவுத்‌ துறை அமைச்சரின்‌ துறையில்‌, நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ அரங்கேறும்‌ முறைகேடுகள்‌ அவ்வப்போது ஊடகங்கள்‌ மூலமாகவும்‌,  செய்தித்‌ தாள்கள்‌ மூலமாகவும்‌ எங்களால்‌ சுட்டிக்‌ காட்டப்பட்டுள்ளது.
மேலும்‌, பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பில்‌ நடைபெற்ற பல கோடி ரூபாய்‌ முறைகேடுகளை ஊடகங்கள்‌ மற்றும்‌ நாளிதழ்கள்‌ வெளிச்சத்திற்குக்‌ கொண்டுவந்த பின்னும்‌ கூட, முறையான நடவடிக்கை இன்று வரை எடுக்கப்படவில்லை.

“ஊருக்குத்தான்‌ உபதேசம்‌” என்ற கொள்கையை விட்டுவிட்டு, எதிர்க்கட்சித்‌ தலைவருக்கு உபதேசம்‌ செய்வதை விட, அரசு விழாக்களிலும்‌, பொதுக்கூட்ட மேடைகளிலும்‌, தனிப்பட்ட முறையிலும்‌, நாகரீகமாக பேசுவது மற்றும்‌ நடந்துகொள்வது
எப்படி என்பது குறித்து, அவருடைய கட்சித்‌ தலைவருக்கு பாடம்‌ எடுத்தால்‌, தமிழகத்தில்‌ ஒரு நாகரீகமான, ஆரோக்கியமான, கண்ணியமான அரசியலை முன்னெடுக்கலாம்‌ என்பதைத்‌ தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்‌ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: 2026-ல் அன்புமணி கோட்டையில் உட்காரனும்.. உங்களுக்கு எதுக்கு பதவி.. பாமக நிர்வாகிகளை கலங்கடித்த ராமதாஸ்..

click me!