RAIN : அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அப்டேட் !!

By Raghupati R  |  First Published May 28, 2022, 3:10 PM IST

Rain In Tamilnadu : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகம், புதுவை,காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், கேரளா, லட்சத்தீவு ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

Tap to resize

Latest Videos

இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே,கேரளாவில் அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவ மழை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

click me!