கறிக்கோழி விலை உயர வாய்ப்பு.. தொடர் போராட்டத்தில் கோழி பண்ணையாளர்கள்.. அரசு தலையிடுமா..?

By Thanalakshmi VFirst Published May 28, 2022, 2:39 PM IST
Highlights

கோழி குஞ்சுகளை வளர்த்து கறிக்கோழியாக விற்பனை செய்யும் பண்ணையாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால், கறிக்கோழி விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 650க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகளில், வாரந்தோறும் 2 லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு செல்கின்றது. மேலும் இந்த பண்ணை உரிமையாளர் கோழி குஞ்சுகளை பல்லடம் தனியார் கறிக்கோழி கம்பெனிகளிடமிருந்து வாங்குகின்றனர்.

குஞ்சுகளை பண்ணை உரிமையாளர்கள் 45 நாட்கள் வளர்த்து திரும்ப கம்பெனியிடம் ஒப்படைக்கின்றனர். மேலும் கிலோவுக்கு ரூ.6.50 என்ற கணக்கில்  பண்ணை உரிமையாளருக்கு பணம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கறிக்கோழியின் கிலோ விலையை உயர்த்த வேண்டும் என்று கூறி பண்ணை உரிமையாளர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.மேலும் குஞ்சுகளுக்கு தேவையான தீவனம், மருந்துகளில் விலை அதிகரித்துவிட்டதாகவும், பண்ணையை நடத்தும் செலவும் உயர்ந்துவிட்டதாகவும் கூறும் உரிமையாளர்கள், 24 நாட்களாக குஞ்சுகளை வாங்க மறுத்து பண்ணைகளை மூடியுள்ளனர். இதனால் கறிக்கோழியின் விலை உயர் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் இதுக்குறித்து பேசும் பண்ணை உரிமையாளர்கள், குஞ்சு வளர்ப்புக்கு உரிய விலை தராததால் வங்கிகளில் கடன் வாங்கி தொழில் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். அதோடுமட்டுமல்லாமல் கிலோவுக்கு ரூ.12 கொடுத்தால்தான் தொழிலை நடத்த முடியும். எனவே இது தொடர்பாக அரசு, கம்பெனி, பண்ணையாளர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இருப்பினும், முதல்வர் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரிடம் இதுக்குறித்து மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

கோழி பண்ணை உரிமையாளர்களின் போராட்டம் தீவிரமாகி வருகிறது. பல்வேறு இடங்களில் கோழிக்குஞ்சுகளை பண்ணைகளில் இறக்க எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பியதால் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர் போராட்டத்தினால் கறிக்கோழியின் விலை உயர்ந்து வருகிறது. விரைவில் மாநில அளவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கோழி வளர்ப்பு சங்க மாநில .செயற்குழு உறுப்பினர் தெரிவித்தார்

மேலும் படிக்க: ஆன்லைனில் ரம்பம்.. மனைவி, பிள்ளைகளை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்..!

click me!