கல்வி துறையில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பங்கு ஈடு இணையற்றது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள், தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று 122வது காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. அதன்படி காமராஜரின் படத்திற்கு முதல்வர், அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Thoothukudi: தூத்துக்குடியில் தொழிலதிபர் விரும்பியதாலேயே துப்பாக்கிச்சூடு - நீதிமன்றம் வேதனை
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரு கே காமராஜ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நான் நினைவுகூர்கிறேன். தனது தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைப் பண்புக்காகவும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணிகளுக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.
போர் அடித்த தமிழ்நாடு போலீஸ்? இந்த முறை ஆந்திரா போலீசில் சிக்கும் TTF? திருப்பதியில் வழக்கு பதிவு
கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது லட்சியங்களை நிறைவேற்றவும் நீதியும், கருணையும் மிகுந்த சமூகத்தை உருவாக்கவும் நாம் உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.