தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் விரும்பியதாலேயே துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபென் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் வாரணை நீதிபதிகள் எஸ்எஸ் சுந்தர் மற்றும் செந்தில் குமார் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், ஏற்கனவே வழக்கு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாகவும் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மனுதாரரின் இதுபோன்று கோரிக்கை வைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
undefined
போர் அடித்த தமிழ்நாடு போலீஸ்? இந்த முறை ஆந்திரா போலீசில் சிக்கும் TTF? திருப்பதியில் வழக்கு பதிவு
மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகாரிகளின் சொத்து விவரங்களையும் விசாரிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், சம்பவம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும் இந்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிப்பு; கடலூரை அதிரவைத்த பரபரப்பு சம்பவம்
இந்த விவகாரத்தில் சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை. பொதுமக்களை புழுக்களை போன்று நசுக்கி உள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய எந்த அதிகாரியின் பெயரையும் குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்தி வருகிறீர்கள். இந்த வழக்கு விசாரணை சிபிஐ. அதிகாரிகளின் கையாளாகாதனத்தை காட்டுவதாக கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என்று எப்படி அறிக்கை தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.