Tamilisai Soundararajan | ராகுல் காந்தியின் பேச்சால் இந்துகளின் மனம் புண்பட்டுள்ளது; தமிழிசை சௌந்தரராஜன்

By Velmurugan s  |  First Published Jul 2, 2024, 12:24 PM IST

இந்துகள் என்றாலே வன்முறையாளர்கள் என்பது போல் பேசியுள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் ஆளுநர் தமிழிசை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகி இருக்கும். ராகுல் காந்தி அவர்களுக்கு கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள்  என்று ஒட்டு மொத்த இந்துக்களையும் மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்.  இதற்கு மீண்டும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

நாடாளுமன்றத்திற்கு என்று நடைமுறை உண்டு. இதை எல்லாம் மீறி ராகுல் காந்தி நேற்று படம் காண்பித்துக் கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் விளம்பரம் தேடிக் கொள்ளும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பேசியுள்ளார். இது அவரது பயிற்சியின்மை மற்றும்  முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு ராகுல் காந்தி பேசினாலும் தமிழகம், பாண்டிச்சேரியைச் சேர்ந்த 40 எம்பிகள் ஒரு எதிர்ப்பும் கொடுக்காமல் அமர்ந்துள்ளது வேதனையளிக்கிறது.

Latest Videos

நீங்கள் தொடங்கிய நீட் எதிர்ப்பு இன்று எங்க கொண்டுவந்து நிருத்தீருக்கு பாத்தீங்களா? எல்.முருகன் கேள்வி

40 பேர் நாடாளுமன்றம் சென்றதில் எந்த பயனும் இருக்காது. சத்தம் போடுவார்கள் அவ்வளவு தான். இதனை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராகவே இருக்கிறது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  மதுவிலக்கை பற்றி அதிகம் பேசினார். தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கும் அளவிற்கு பயந்து போய் உள்ளார்.

சிறுக சிறுக சேர்த்து வைத்த நகையை சிறுக சிறுக ஆடையை போட்ட வங்கி பணியாளர்; பிள்ளையார்பட்டியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் எல்லோர் மனதிற்கும் மிகுந்த வேதனை அளிக்கக் கூடியது. முதல்வர் மற்றும் துறை அமைச்சர்கள் அங்கு போய் பார்க்கவில்லை.  சிபிஐ விசாரணை வேண்டும் என்றால்  தமிழக அரசாங்கம் பயப்படுகிறது. சிபிஐ  விசாரணைக்கு  மாநில அரசிடம் இருந்து ஒத்துழைப்பு வந்தால் தான் சிபிஐ விசாரணை மேற்கொள்ள முடியும். அண்ணாமலை உயர் கல்விக்காக லண்டன் செல்வது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, உள்கட்சி தொடர்பான எந்த கருத்தும் நான் சொல்ல விரும்பவில்லை என்றார்.

click me!