Annamalai: அண்ணாமலையை நம்பி பந்தயம் கட்டிய தொண்டர்; முச்சந்தியில் மொட்டை அடித்து ஊரை சுற்றி வந்த அவலம்

By Velmurugan s  |  First Published Jun 6, 2024, 1:18 PM IST

கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து திருச்செந்தூரில் பாஜக தொண்டர் ஒருவர் நடுரோட்டில் மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக, பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்டோருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் பாஜக.வால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. அனைவரது மத்தியிலும் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் இரண்டாம் இடத்தையே பிடித்தார்.

பயணத்தின் போது அசதியில் உறங்கிய ஓட்டுநர்? ஓசூரில் தடுப்பு சுவற்றில் லாரி மோதி ஒருவர் பலி

Tap to resize

Latest Videos

மேலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களாக அறியப்பட்ட டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், சௌமிய அன்புமணி என அனைவருமே இரண்டாம் இடத்திற்கே தள்ளப்பட்டனர். புதுவை உட்பட தமிழகம் முழுவதும் என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்ற பெற்றுள்ளனர்.

பழனி அருகே கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்; இளசுகளுக்கு முத்தங்களை பறக்கவிட்ட அழகிகள்

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்ற பாஜக தொண்டர் ஒருவர் விசிக, அதிமுகவினரிடம் ஒரு பந்தயம் கட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் படி கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட்டால் மொட்டை அடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் திமுக வேட்பாளரிடம் தோல்வியை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதனால் தாம் கூறியது போன்று திருச்செந்தூரின் பிரதான சாலையில் மையப் பகுதியில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்டு தனது பந்தயத்தை முடித்துக் கொண்டார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!