60 நாட்கள் தடைக்காலம் நிறைவு; கூண்டில் இருந்து விடுபட்ட பறவையாக கடலுக்குள் சீறிப்பாய்ந்த படகுகள்

By Velmurugan s  |  First Published Jun 15, 2024, 10:19 AM IST

தமிழகத்தில் 60 நாட்கள் மீட் பிடி தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.


ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க விசைப்படகுகள் மீன்பிடிப்பிற்கு தமிழக அரசு தடை விதித்திப்பது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் 2 மாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் நீங்கியதை தொடர்ந்து ஜூன் 15 இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

நெல்லையில் சாதிமறுப்பு திருமணத்தை நடத்தி வைத்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்

Tap to resize

Latest Videos

undefined

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று அதிகாலை முதல்  கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. தூத்துக்குடி விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 60 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்வதால் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியபடி கடலுக்கு ஆர்வமாக சென்றனர். மேலும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

"அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மசூதி, தேவாலயம்" திமுகவுக்கு தெம்பும், திராணியும் உள்ளதா? - ஜீயர் சவால்

இந்நிலையில் 60 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தாங்கள்  இன்று நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம். அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

click me!