பக்திப் பரவசத்துடன் ஸ்ரீசுந்தரமகாலிங்க சுவாமியை தரிசித்த வெளிநாட்டு பக்தர்கள் !!

By Selvanayagam PFirst Published Jan 5, 2019, 8:02 AM IST
Highlights

செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பக்தர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்திப் பரவசத்துடன் அவர்கள் அமாவாசைத் திருவிழாவில் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த அருள்மிகு சுந்தரமகாலிங்கம் கோவில் மிக பிரசித்தி பெற்றது. அமாவாசை நாட்களில் குறிப்பாக ஆடி அமாவாசைக்கு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமாவாசை பூஜையில் பங்கேற்க செக் குடியரசு நாட்டை சேர்ந்த பக்தர்கள் 55 பேர் மலையேறி வந்தனர்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ்பைபர் 65, என்பவர் தலைமையில் அந்நாட்டினர் சிலர் இந்துமத நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். கடந்த 6 ஆண்டுகளாக அவர்கள்  தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்து வந்தனர்.

கடந்த 26 ஆம் தேதி  தமிழகம் வந்த இவர்கள் 55 பேர், தஞ்சாவூர், கும்பகோணம், நவக்கிரக கோயில்கள், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, குற்றாலம் கோயில்களில் தரிசனம் செய்து விட்டு சதுரகிரி வந்தனர்.

அவர்களுக்கு  ஆர்.ஆர்.மடம் சார்பில் சிறப்பான  வரவேற்பளிக்கபட்டது. இதையடுத்து அவர்களிடம் சோதனை நடைபெற்றது.  பின்னர் வனத்துறை மற்றும் போலீசாரின் பாதுகாப்புடன்அவர்தகள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு தங்கி கோயிலில் நடக்கும் அமாவாசை பூஜையில் பங்கேற்றனர். இதையடுத்து அவர்கள்  மலையிலிருந்து இறங்கி தேக்கடி வழியாக சபரிமலை சென்றனர்..

இயற்கை சூழல், மூலிகை வனங்கள் பற்றி கேள்விப்பட்டு சதுரகிரிக்கு வந்ததாகவும், தங்கள் குழுவில் உள்ள 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நெற்றியில் குங்குமம் ...சிவாய கோஷம்சதுரகிரிக்கு வந்த செக் குடியரசு பக்தர்கள் சபரிமலைக்கு மாலையணிந்து கருப்பு உடையுடன் காணப்பட்டனர்.

நெற்றியில் குங்குமத்துடன் காணப்பட்ட இவர்கள், சதுரகிரியில் 'ஓம் நமசிவாய' கோஷத்துடன் மலையேறிய காட்சியை தமிழக பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

click me!