பதிவு எண் இல்லாத வாகனத்தில் பயணிக்கும் கோவை மேயர்..! சர்ச்சையால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Sep 5, 2022, 2:40 PM IST

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, பதிவு எண் இல்லாமல்  அரசு வாகனத்தினை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பதிவு எண் இல்லாத மேயர் கார்

கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் கல்பனா. இவருக்கு சமீபத்தில் மாநாகராட்சியில் இருந்து புதிய இன்னோவா வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனத்திற்கு பதிவு எண் வாங்காமல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயன்படுத்த பட்டு வருகின்றது. இன்று கோவை மத்திய சிறையில் நடைபெற்ற வ.உ.சி 151 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவும்  பதிவு எண் இல்லாத காரையே மேயர் கல்பனா பயன்படுத்தினார். 

Tap to resize

Latest Videos

அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி அச்சத்தில் உளரும் ஆர்.எஸ் பாரதி.! கைவைத்து பாருங்கள் வேதனைப் படுவீர்கள்- பாஜக

விரைவில் நம்பர் பிளேட்

பதிவு எண் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது மோட்டார் வாகனசட்டப்படி தவறு என்கின்ற நிலையில் மக்கள் பிரதிநிதியே ஒரு வாரத்திற்கும் மேலாக பதிவு எண் இல்லாத வாகனத்தை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது , வாகனம் வாங்கியவுடன்  போக்குவரத்து துறையில்  பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், நம்பர் பிளேட் போக்குவரத்து துறையில் இருந்து வந்தவுடன் உடனடியாக பொறுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்
திருச்செந்தூர் கோயிலில் முகமது மடியில் அமரவைத்து பிராகரனுக்கு மொட்டை போட்ட சீமான்...

click me!