அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை.. புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பு..

By Thanalakshmi V  |  First Published Sep 5, 2022, 1:49 PM IST

அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1000 வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ "புதுமைப்‌ பெண்‌” திட்டத்தை முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 


அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1000 வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ "புதுமைப்‌ பெண்‌” திட்டத்தை முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை, பாரதி மகளிர்‌ கல்லூரி வளாகத்தில்‌ நடைபெற்ற விழாவில்‌, சிறப்பு விருந்தினராக தில்லி முதலமைச்சர்‌ அரவிந்த்‌ கெஜ்ரிவால் கலந்து கொண்டார். சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை சார்பில்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ.1000 வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கும்‌ "புதுமைப்‌ பெண்‌" திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‌.

Tap to resize

Latest Videos

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,” பெண்கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண்‌ சமூகம்‌ நாளைய தமிழகத்தை தாங்கும்‌ அறிவியல்‌ வல்லுநர்களாகவும்‌, மருத்துவராகவும்‌, பொறியாளராகவும்‌, படைப்பியலாளராகவும்‌, நல்ல குடிமக்களை பேணும்‌ உயர்கல்வி கற்ற பெண்களாகவும்‌, கல்வியறிவு,
தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌, உருவாக அடித்தளமாக "புதுமைப்‌ பெண்‌" என்னும்‌ உன்னத திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க:அண்ணாமலையை பார்த்து நடுநடுங்கி அச்சத்தில் உளரும் ஆர்.எஸ் பாரதி.! கைவைத்து பாருங்கள் வேதனைப் படுவீர்கள்- பாஜக

இத்திட்டத்தின்‌ மூலம்‌, பெண்களுக்கு உயர்‌ கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்‌, குழந்தை திருமணத்தைத்‌ தடுத்தல்‌, குடும்பச்‌ சூழ்நிலை மற்றும்‌ வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்‌, பெண்‌ குழந்தைகளின்‌ இடைநிற்றல்‌ விகிதத்தை குறைத்தல்‌, பெண்‌ குழந்தைகளின்‌ விருப்பத்‌ தேர்வுகளின்படி அவர்களின்‌ மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்‌, உயர்‌ கல்வியினால்‌ பெண்களின்‌ திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத்‌ துறைகளிலும்‌ பங்கேற்கச்‌ செய்தல்‌, உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்‌ மூலம்‌ பெண்களுக்கான தொழில்‌ வாய்ப்புகளை அதிகரித்தல்‌,
பெண்களின்‌ சமூக மற்றும்‌ பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்பெறும்‌ மாணவிகள்‌ 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ படித்து தமிழ்நாட்டில்‌ உயர்கல்வி பயில்பவராக இருத்தல்‌ வேண்டும்‌ அல்லது தனியார்‌ பள்ளிகளில்‌ கல்வி உரிமைத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 5-ஆம்‌ வகுப்பு வரை பயின்று 9-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை அரசுப்‌ பள்ளிகளில்‌ படித்த மாணவியர்களாக இருத்தல்‌ வேண்டும்‌.

மேலும் படிக்க:மிகப்பெரிய சதி நடந்து இருக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறையால் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல்..!

மாணவிகள்‌ 8-ஆம்‌ வகுப்பு அல்லது 10-ஆம்‌ வகுப்பு அல்லது 12-ஆம்‌ வகுப்புகளில்‌ படித்து பின்னர்‌, முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில்‌ சேரும்‌ படிப்புக்கு மட்டுமே இத்திட்டம்‌ பொருந்தும்‌. புதுமைப்‌ பெண்‌ திட்டத்தில்‌, சான்றிதழ்‌ படிப்பு ,இளங்கலைப்‌ பட்டம்‌, தொழில்‌ சார்ந்த படிப்பு மற்றும்‌ பாரா மெடிக்கல்‌ படிப்பு போன்ற படிப்புகளை பயிலும்‌ மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்‌.

மேலும் படிக்க:மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து..!

மேலும்‌, முதலாம்‌ ஆண்டிலிருந்து இரண்டாம்‌. ஆண்டு செல்லும்‌ மாணவியரும்‌, இரண்டாம்‌ ஆண்டிலிருந்து மூன்றாம்‌ ஆண்டு செல்லும்‌ இளங்கலை பட்டப்படிப்பு பயிலும்‌ மாணவியர்களும்‌, தொழிற்கல்வியைப்‌ பொருத்தமட்டில்‌, மூன்றாம்‌ ஆண்டிலிருந்து நான்காம்‌ ஆண்டிற்குச்‌ செல்லும்‌ மாணவிகளுக்கும்‌, மருத்துவக்‌ கல்வியைப்‌ பொருத்தமட்டில்‌, நான்காம்‌ ஆண்டிலிருந்து ஐந்தாம்‌ ஆண்டு செல்லும்‌ மாணவியர்களும்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயனடைவர்‌.

அந்த வகையில்‌, இன்று முதற்கட்டமாக 67,000 கல்லூரி மாணவிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இவ்விழாவில்‌, அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர் பாபு, அன்பில் மகேஷ், மேயர் பிரியா, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

click me!