தீபாவளிக்காக மீன் பிடித் தொழிலுக்கு ஐந்து நாட்கள் லீவு விட்ட மீனவர்கள்; 800-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தம்…

First Published Oct 17, 2017, 7:48 AM IST
Highlights
Fishermen fired for five days in the fishing field for Deepavali More than 800 boats on the shore ...


புதுக்கோட்டை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் ஐந்து நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லமாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால், படகுகள் அனைத்தும் கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இனி வரும் ஐந்து நாட்களுக்கு தங்களது மீன்பிடித் தொழிலை நிறுத்துப் போகிறோம் என்று அறிவித்தனர். அவர்கள் அவ்வாறு அறிவித்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தீபாவளியையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டோம் என்று அறிவித்ததால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மீன்பிடித் தளம் கடந்த மூன்று நாள்களாக வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. 

கடலுக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணம் குறித்து மீனவர் ஒருவர் தெரிவித்தது:

“தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குடும்பத்தோடு சேர்ந்து தீபாவளியை கொண்டாட விரும்புகிறோம். கடலுக்குள் சென்றுவிட்டால் எப்போது கரை திரும்புவோம் என்று எங்களுக்கே தெரியாது. மேலும், இலங்கை கடற்படையினரின் அட்டூழியமும் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. அதனால், இந்த ஐந்து நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்வதிலை என்று முடிவெடுத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

வரும் 20-ஆம் தேதிதான் மீண்டும் கடலுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!