நாளை கூடுகிறது 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை.... ஆளுநர் உரையுடன் தொடக்கம்!!

By Narendran SFirst Published Jan 8, 2023, 11:48 PM IST
Highlights

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை ஜன.9 ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். அதன்படி, நாளை (ஜன.9) காலை 10 மணிக்கு 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூடுகிறது. சென்னை, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் இந்த சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க: நாங்க காங்கிரஸ் மாதிரி இல்லை... மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து!!

இதனை அடுத்து அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இரண்டாவது நாள் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இரங்கல் தெரிவிப்பார்கள்.

இதையும் படிங்க: அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

அதைத்தொடர்ந்து நாள் முழுவதும் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்படும். இதற்கிடையே பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கூட்டத்தொடரை அதற்குள் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 12 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை கூட்டம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!