பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்னதாக பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான டோக்கன்கள் விநியொகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல் பண்டிகை… திண்டுக்கல்லில் பானை செய்யும் பணிகள் தீவிரம்!!
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அதன்படி, தலைமைச் செயலகம் அருகே உள்ள போர் நினைவுசின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உள்ளார்.
இதையும் படிங்க: சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
இதேபோல், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உள்ள சர்தார் ஜன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறார். இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரேஷன் விலைகடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க உள்ளனர்.