மெட்ரோ ரயில் பணிகள் எதிரொலி... நாளை முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

Published : Jan 08, 2023, 07:03 PM IST
மெட்ரோ ரயில் பணிகள் எதிரொலி... நாளை முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம்!!

சுருக்கம்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுக்குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாம்பலம் பிரதான சாலை (கோடம்பாக்கம் மெட்ரோ ஸ்டேசன்) சென்னை மெட்ரோ நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட உள்ளக் கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 25.12.2022 முதல் ஒரு வாரகாலத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: ஈரோட்டில் உரிமையாளர்களிடையே மோதல்; உணவகம் தீ வைத்து எரிப்பு

இந்த ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டபடி, இந்த போக்குவரத்து மாற்றங்கள் 09.01.2023 முதல் 07.04.2024 வரை மேலும் பதினைந்து மாதங்கள் நீட்டிக்கப்படுகிறது. மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம். 

இதையும் படிங்க: பிலிபைன்ஸ் பெண்ணை பெரியார் வழியில் சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட அரியலூர் இளைஞர்

மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம். மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம். மேற்படி வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chennai Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ளே முடிச்சுடுங்க! சென்னையில் முக்கிய இடங்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை!
Chennai Metro: மெட்ரோ பயணிகளே உஷார்! இனி உரக்கப் பேசினாலும்.. செல்போனில் பாட்டு கேட்டால் ரூ.2,500 அபராதம்..!