சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ள நிலையில், மெட்ரோ ரயிலில் சமைக்காத மீன், இறைச்சியை எடுத்துச்செல்லும் பயணிகள் தடுத்து நிறுத்தப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக குளிரூட்டப்பட்ட மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் அண்மையில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில், மெட்ரோ ரயில்வே விதிகள் 2014ன் படி சமைக்கப்படாத இறைச்சி, மீன், உயிரிழந்த பறவைகள், விலங்குகளை மெட்ரோ ரயிலில் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கொங்கு பகுதியில் கலைகட்டிய “கோவை விழா”; மாரத்தானில் பங்கேற்ற ஆட்சியர்
மேலும் சமைக்கப்படாத இறைச்சி, மீன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரும் பயணிகளை நிலையத்தில் இருந்து வெளியேற்றவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட, மூடிய நிலையில் உள்ள மெட்ரோ ரயிலில் சமைக்கப்படாத இறைச்சிகளை எடுத்துச் செல்லும் போது அதிலிருந்து துர்நாற்றம் ஏற்பட்டு சக பயணிகளுக்கு தொந்தரைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி; தச்சன்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்
ஆனால், அண்டை நகரமான பெங்களூருவில் சமைக்கப்படாத உணவுகளை மெட்ரோ ரயிலில் எடுத்துச் செல்லலாம். ஆனால், அவற்றை ரயிலில் திறந்து பார்க்கவோ, சாப்பிடவோ அனுமதி கிடையாது. இறைச்சி உள்ளிட்ட பொருட்களை நன்கு இறுக்கமாக மூடிய நிலையிலேயே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
இதே போல் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகமும் தங்களது கட்டுப்பாடுகளை சற்று தளர்த்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.