தமிழகம் முழுவதும் பிப்.12 அன்று ஆர்பார்ட்டம்... அறிவித்தது ஜாக்டோ ஜியோ அமைப்பு!!

By Narendran SFirst Published Jan 8, 2023, 9:59 PM IST
Highlights

தமிழக முழுவதும் பிப்.12 ஆம் தேதி ஆர்பார்ட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தமிழக முழுவதும் பிப்.12 ஆம் தேதி ஆர்பார்ட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், தமிழக நிதியமைச்சர் தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை புறக்கணித்து வருகிறார். நாங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை; எங்கள் போராட்டம் கொள்கைக்கு எதிரானது.

இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல் பண்டிகை… திண்டுக்கல்லில் பானை செய்யும் பணிகள் தீவிரம்!!

அக விலைப்படியினை மத்திய அரசு வழங்கிய தேதியில்‌ வழங்காமல்‌ தொடர்ச்சியாக ஆறு மாத காலம்‌ தாழ்த்துவதோடு நிலுவைத்‌ தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்‌ விடுப்பு, மீண்டும்‌ பழைய ஒய்வூதியத்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்துதல்‌, இடைநிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ முதுநிலை ஆசிரியர்களின்‌ ஊதிய முரண்பாடுகளைக்‌ களைவது, தொகுப்பூதியம்‌- சிறப்பு காலமுறை ஊதியம்‌ மற்றும்‌ தினக் கூலியில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌, சத்துணவு, அங்கன்வாடி, எம்‌ஆர்பி செவிலியர்‌, வருவாய்‌ கிராம உதவியாளர்‌, ஊர்ப்புற நூலகர்‌, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்‌ ஆகியோருக்கு காலமுறை ஊதியம்‌ வழங்குவது, சாலைப்‌ பணியாளர்களின்‌ 41 மாத பணிநீக்கக்‌ காலத்தினை முறைப்படுத்துதல்‌, காலிப்‌ பணியிடங்களை உடனடியாக நிரப்புதல்‌, 21 மாத ஊதிய மாற்று நிலுவைத்‌ தொகையினை வழங்குதல்‌ உள்ளிட்ட கோரிக்கைகள்‌ குறித்து முதலமைச்சரிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்‌.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம்... நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

எங்களுக்கான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும். வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும், மார்ச் 5 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், மார்ச் 24 ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

click me!