2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலின் போது திமுக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது. அதன்பிறகு திமுக தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றுப்பட்டுவிட்டதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 2,500 செவிலியர்கள் பணிநீக்கம் செய்த திமுக அரசு... மக்கள் விரோதச் செயல் என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!
ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுக்குறித்து எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் விமர்சனங்களை தெரிவித்து வருவதோடு எப்போது குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைந்து 18 மாசம் ஆச்சு.. எந்த திட்டமும் மக்களுக்கு செல்லவில்லை - ஆர்.பி உதயகுமார் பேச்சு
இந்த நிலையில் 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளர். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிருக்கு உரிமை தொகை தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுப்பு பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2023 பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.