ராமநாதபுரத்தில் கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் பயிர் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். வட்டி கட்ட முடியாமல் நகைகளை அடகு வைத்துத் தவிப்பதாக வேதனை தெரிவித்த விவசாயிகளின் போராட்டக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.