கோவையில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா..! மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

By Ajmal KhanFirst Published Nov 30, 2022, 1:17 PM IST
Highlights

கோவை மாவட்டம் சூலூர் வட்டத்தில்  ராணுவ தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

 கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி ஊராட்சியில் கந்தம்பாளையம் சடையன்செட்டிபாளையம், பூசாரிபாளையம், குளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 421.41 ஏக்கரில் மிகப்பெரிய தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தொழில் முனையம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

ராணுவ  தொழில் முனையம் அமைய உள்ள பகுதிக்கு மிக மிக அருகில் புளிய மரத்து பாளையம், குளத்துப்பாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் மிக குறைவான மழைப்பொழிவு காரணமாக   காய்கறி. தென்னை, வாழை சார்ந்த விவசாயம் செய்தும் விவசாய தொழிலான கோழி வளர்ப்பு மற்றும் பசுக்கள், ஆடுகள் வளர்த்து எங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு கலைமாமணி.? விருதுகள் ரத்து செய்யப்படும்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

 இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையத்தில் பவுண்டரிகள் மற்றும் கெமிக்கல் தயாரிப்பு நிறுவனங்கள் வந்தால் அவை வெளியேற்றும் கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்தால் உபயோகமற்றதாக மாறிவிடும் அபாயம்' உள்ளதாகவும், மேலும் தொழில்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர். எனவே  தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் தொழில் முனையம் அமைப்பதை தவிர்த்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்கும்படியும் எங்களின் வருங்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்கு உதவும் படியும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

நடிகைகளை ஆபாசமாக பேசிய வழக்கு..! குஷ்பு, நமீதாவிடம் மன்னிப்பு கேட்ட திமுக பேச்சாளர்

click me!