PTR Palanivel Rajan: சபாஷ் !தமிழக அரசின் நிகரக் கடன் 30 சதவீதம் குறைந்தது!வருமானம் உயர்கிறது

By Pothy Raj  |  First Published Nov 30, 2022, 1:07 PM IST

நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் நிகர வருமானம் அதிகரித்துள்ளது, அதேசமயம், நிகர கடன் 30.3 சதவீதம் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் நிகர வருமானம் அதிகரித்துள்ளது, அதேசமயம், நிகர கடன் 30.3 சதவீதம் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நிதியாண்டில் செப்டம்பர் வரை தமிழக அரசின் நிகரக் கடன் ரூ.35ஆயிரம் கோடியாக இருந்தநிலையில் நடப்பு நிதியாண்டில் நிகரக் கடன்ரூ.24,403 கோடியாக 30.3 சதவீதம் குறைந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

என்டிடிவி இயக்குநர் பொறுப்பிலிருந்து பிரணாய் ராய், ராதிகா ராய் விலகல்

தமிழக அரசின் நிதி நிலை குறித்தும், நிதிமேலாண்மை குறித்தும் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சித்து வரும்நிலையில் கடன்சுமை குறைந்துவருவது சிறப்பான நிதிநிர்வாகத்துக்கு உதாரணமாகும். கடன் சுமை குறைவதோடு மட்டுமின்றி வருமானம் உயர்வதற்கான வழிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தமிழக அரசின் நிதிநிலை சிறப்பான  இடத்தை நோக்கி நகரும், வருமானம் உபரியாக இருக்கும் மாநிலத்தின் பட்டியலில் சேரும். தற்போது ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்கள்தான் உபரி வருமான மாநிலங்களாக உள்ளன. அந்தப் பட்டியலி்ல விரைவில் தமிழகமும் சேரும். 

தமிழகத்தின் நிதிஅமைச்சர் டிபிஆர் பழனிவேல்ராஜன் பட்ஜெட்டில் குறிப்பிட்டதுபோல் படிப்படியாக தமிழக அரசின் நிதிமேலாண்மை, நிர்வாகம் மேம்பட்டு வருகிறது தெளிவாகிறது. 

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? 4 நகரங்களில் டிசம்பர் 1ல் அறிமுகம்!ஆர்பிஐ அறிவிப்பு

மாநில மேம்பாட்டு கடன் என்ற பெயரில் தமிழக அரசு சந்தையில் பங்குப்பத்திரங்களை வெளியிட்டு கடன் பெறுகிறது. அந்த வகையில் மாநில அரசின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.33ஆயிரம் கோடியாகக் குறைந்துள்ளது, கடந்த ஆண்டு செப்டம்பர் வரை இது ரூ.39ஆயிரம் கோடியாக இருந்தது. 

2022-23ம் நிதியாண்டின் முதல்பாதியில் தமிழகஅரசின் கடன் குறைந்துள்ளது என்பது நிதிமேலாண்மை, நிதித்திறன் செயல்பாடு அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.

சிஏஜி புள்ளிவிவரங்களின்படி, 2022-23ம் நிதியாண்டின் முதல் பாதியில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பவரை ரூ.1.12 லட்சம் கோடியாகும். இது கடந்த நிதியாண்டின் முதல்பாதியில் ரூ.85ஆயிரத்து 209.74 கோடியாகத்தான் இருந்தது.

ஒட்டுமொத்த வருமானம் என்பது, மாநிலத்தின் சுய வரிவருவாய், மத்தியஅரசுடனான வரிப்பகிர்வு, இதர வரிகள், வரிஅல்லாத அவருவாய், மானியங்கள், பங்களிப்புகள் அடங்கும்

அந்தவகையில் தமிழக அரசின் சுயவரி வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் 36.4% அதிகரித்து, ரூ.68,638 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் முதல்பாதியில் ரூ.50,324 கோடியாக இருந்தது. 

3 நிமிடம்தானாம்! 10 தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு! நிர்மலா சீதாராமனுடன் பட்ஜெட் ஆலோசனையில் பங்கேற்கவில்லை

மத்திய அரசுடன் தமிழக அரசின் வரிப்பகிர்வும் அதிகரி்த்து, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.15,341.34 கோடியாகஅதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.10,611.38 கோடியாகத்தான் இருந்தது
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 30ம் தேதிவரை தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.18ஆயிரத்து 726.32 கோடியாக இருக்கிறது. வருவாய் பற்றாக்குறை ரூ.4 ஆயிரத்து 184.10 கோடியாக இருக்கிறது. 

மோதிலால் ஓஸ்வால் நிதிச்சேவை நிறுவனத்தின் கருத்துப்படி, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள் வருவாய் உபரியைக் கொண்டுள்ளன. மிகப்பெரிய மாநிலங்களான கர்நாடகா, குஜராத், தமிழகம், உ.பி., மத்தியப்பிரதேசம் ஆகியவை குறைந்தஅளவு நிதிப்பற்றாக்குறையை வைத்துள்ளன. பீகார், ஆந்திரப்பிரதேசம் நடப்பு நிதியாண்டின் முதல்பாதியில் முழு ஆண்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கை கடந்துவிட்டன


 

click me!