திடீர் மாரடைப்பு? வாக்கிங் சென்ற போது மணக்குள விநாயகர் கோவில் யானை மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

By vinoth kumar  |  First Published Nov 30, 2022, 8:40 AM IST

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் யானை ஒன்று வந்தது. அதன் பெயர் லட்சுமி. இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லாது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வந்தது. 


புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி(32) நடை பயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மணக்குள விநாயகர் கோவில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் யானை ஒன்று வந்தது. அதன் பெயர் லட்சுமி. இந்த யானை மற்ற கோவில் யானைகள் போல் அல்லாது மக்களுடன் மிகவும் அன்புடன் பழகி வந்தது. லட்சுமி யானை புதுச்சேரி மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.

Latest Videos

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. இப்படி அவசரப்பட்டுடிங்களே.. கதறிய தாய்.!

இந்நிலையில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி தினமும் காலை 6 மணிக்கு வாக்கிங் செல்வது வழக்கம். வழக்கம் போல இன்று காலை பாகனுடன் யானை லட்சுமி வாக்கிங் சென்ற திடீரென சாலையில் மயங்கி விழுந்தது. உடனே பதறிபோன பாகன் யானை எழுப்ப பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், உடலில் எந்த அசைவுமின்றி இருந்துள்ளது.

Puducherry | A large number of people, including Lt Governor Tamilisai Soundararajan paid tributes to Lakshmi, the 32-year-old temple elephant of Sri Manakula Vinayagar Temple who passed away today

Lakshmi suddenly collapsed during a walk today on the temple road and passed away pic.twitter.com/XlIS3bnWby

— ANI (@ANI)

உடனே யானையை பரிசோதித்த மருத்துவர்கள் யானை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். யானை  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட்..!

click me!