சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர்... பட்டென காரிலிருந்து இறங்கி வந்து முதலுதவி செய்த தமிழிசை!!

Published : Nov 04, 2022, 10:56 PM IST
சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர்... பட்டென காரிலிருந்து இறங்கி வந்து முதலுதவி செய்த தமிழிசை!!

சுருக்கம்

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு சற்றும் யோசிக்காமல் முதலுதவி செய்த தமிழிசையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு சற்றும் யோசிக்காமல் முதலுதவி செய்த தமிழிசையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் வரும் வழியில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் காயமடைந்து சாலையில் படுத்திருந்தார். அவரது உடம்பில் காயங்கள் ஏற்பட்டதால் ரத்தமும் வெளியேறிக்கொண்டு இருந்துள்ளது.

இதையும் படிங்க: கோவை குண்டு வெடிப்பில் அண்ணாமலை மீது சந்தேகம் இருக்கு .! ஆர்.எஸ்.பாரதி பேச்சு !

இதனை கண்ட தமிழிசை சற்றும் யோசிக்காமல் காரில் இருந்து வேகமாக இறங்கி வந்து அந்த இளைஞருக்கு முதலுதவி செய்தார். மேலும் அவரது காயங்களுக்கு கட்டுப்போட்டுவிட்டார். இதனிடையே ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது. அதில் அந்த இளைஞரை ஏற்றிவிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும்  மருத்துவரை செல்போனில் அழைத்து அவரிடன் இளைஞருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். இது குறித்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை பெய்ததன் எதிரொலி... வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!

மேலும் அந்த பதிவில், புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் வழியில், சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த ஒருவரைக் கண்டதும் எனது காரை உடனடியாக நிறுத்தினேன். முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, இளைஞருக்கு தேவையான சிகிச்சையை அளிக்ககோரி மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசினேன். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி செய்வதன் மூலம் அவர்களின் உயிர்களை காப்பாற்றலாம் என்று குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மகளிர் உதவித்தொகை 150% உயர்வு.. இனி ரூ.1000 இல்ல ரூ.2500.. பிப்ரவரி முதல் வழங்க முதல்வர் உத்தரவு
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று திடீர் விடுமுறை அறிவிப்பு.. குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!