கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. காலையில் வெயில் அடித்த நிலையில் தற்போது கனமழை
மேலும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடர் மழையினால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.. முழ்கிய தரைப்பாலம்.. 10 கிராம மக்கள் தவிப்பு..
இதுக்குறித்து வெளியான செய்திக்குறிப்பில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி 04.11.2022 (வெள்ளி) மற்றும் 05.11.2022 (சனி) ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் மாணவ மாணவியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.