காலப்பட்டு மத்திய சிறைக்கு சென்ற தமிழிசை… மன்னித்து விடுதலை செய்யுமாறு கைதிகள் கண்கலங்கியதால் நெகிழ்ச்சி!!

By Narendran SFirst Published Nov 1, 2022, 12:11 AM IST
Highlights

புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தங்களை மன்னித்து விடுதலை செய்யக்கோரி கைதிகள் கதறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தங்களை மன்னித்து விடுதலை செய்யக்கோரி கைதிகள் கதறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டியலின் 147 ஆவது பிறந்த தினத்தையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்று அங்கு சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப் படத்தை திறந்து வைத்தார். அவரை அங்கிருந்த கைதிகள் பூக்களை தூவி வரவேற்றனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...ரூ.50,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..

பின்னர் தனது பெயரில் உருவாக்கப்பட்டிருந்த 147 வகையான மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை தோட்டத்தை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். அதை தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளால் உருவாக்கப்பட்ட  திராட்சைத் தோட்டத்தை பார்வையிட்டு கைதிகளை பாராட்டினார். பின்னர் பேசிய அவர், இன்று முக்கியமான தினம் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 ஆவது பிறந்த தினம் இன்று மேலும் என்னுடைய திருமண நாள் இன்று காலையில் கோயிலுக்கு சென்று மணக்குள விநாயகர் தரிசித்து விட்டு படைத்தவனை பார்த்துவிட்டு இங்கு படைப்பாளிகளை பார்க்க வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தில் ஓடிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்!!

இந்த நிகழ்ச்சி முடிந்து தமிழிசை சௌந்தரராஜன் கிளம்பும் போது  அங்கு இருந்த ஆயுள் கைதிகள், தண்டனை காலம் முடிந்து சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் 20க்கும் மேற்பட்ட கைதிகள் வழியில் மண்டியிட்டு தங்களை மன்னித்து விடுதலை செய்யுமாறு காலில் விழுந்து கதறி கண்கலங்கினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

click me!