புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை விரைவில் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோரை சந்தித்து புதுவை வளர்ச்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். தற்போது ஒன்றிய அரசு ரூ.1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகளை படிப்படியாக சரிசெய்து வருகிறோம்.
இதையும் படிங்க: நண்பர்களுடன் ஆற்றில் குளித்த மாணவன்.. நீரில் மூழ்கி பலியான சம்பவம்
undefined
விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசிடம் நிலம் கோரியுள்ளோம். தமிழக அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் நிறைய தொழிற்சாலைகள் வர வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். கடந்தகாலங்களில் சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி இருந்தோம். இந்த நிலத்தை மத்திய அரசு மீண்டும் புதுச்சேரி அரசிடம் ஒப்படைப்பதாக கூறியிருக்கிறது. இந்த நிலம் பிப்டிக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அங்கு 100 ஏக்கரில் மருத்துவ பூங்கா தொடங்க அனுமதி வழங்கவுள்ளோம்.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து... ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நேர்ந்த சோகம்!!
மீதமுள்ள இடத்தில் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கவுள்ளோம். பட்ஜெட்டில் அறிவித்தப்படி குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையும் புதிதாக 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியமும் விரைவாக வழங்கப்படும். அதன் பிறகு விண்ணப்பிப்போருக்கும் உதவித்தொகை வழங்கப்படும். புதுவையில் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பிரதமர் மோடி இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி, புதுவையில் 2 ஆயிரம் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.