ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர், அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார்.
பிரபல டிக்டாக்கர் ரவுடி பேபி சூர்யாவின் காட்சிகளை பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்து, இந்த வழக்கு தொடர்பாக தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் . இவர், அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசினார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க;- பெண் குறித்து ஆபாச பதிவு.. ரவுடி பேபி சூர்யாவை ரவுண்ட் கட்டும் போலீஸ்.. குண்டர் சட்டம் பாய்ந்தது..
undefined
பின்னர் ரவுடி பேபி சூர்யாவையும் சிக்கந்தர்ஷா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ரவுடி பேபி சூர்யா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காழ்புணர்ச்சியோடு அளிக்கப்பட்ட புகாரில் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாகவும், தனது கோரிக்கையை அறிவுரைக்கழகம் உரிய முறையில் பரீசிலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காரமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மனுதாரர் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியுள்ளதாகக் கூறி, லேப்டாப் மூலம் நீதிபதிகளிடம் டிக் டாக் காட்சிகளை காண்பித்தார். ஒரு சில காட்சிகளை பார்த்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள் , வழக்கில் முகாந்திரம் உள்ளதாகவும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க;- ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் அவ்ளோ ஆபசமாக பேசுனாங்க.. எங்களால் தாங்கவே முடியல..கண்ணீர் விட்ட தம்பதியினர்