Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட்..!

By vinoth kumar  |  First Published Nov 30, 2022, 8:11 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கே.கே. நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.


சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கே.கே. நகர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Latest Videos

இதையும் படிங்க;- மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கட்டணமா.? அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்

தாம்பரம்:

பல்லாவரம் பவானி நகர், கண்ணபிரான் தெரு, கோவலன் தெரு, பொன்னியம்மன் தெரு, பல்லாவரம் கிழக்கு பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

கே.கே. நகர்:

வளசரவாக்கம் ஜானகி நகர், லாம்பர்ட் தெரு, சோலை கிருஷ்ணன் தெரு, மணிராஜன் தெரு, பிரகாசம் தெருவின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- சினிமா பாணியில் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த அரசு விரைவுப் பேருந்து! தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சல்

click me!