Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் ..!

By vinoth kumarFirst Published Nov 29, 2022, 8:25 AM IST
Highlights

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- சென்னையில் அதிர்ச்சி.. ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை.. இப்படி அவசரப்பட்டுடிங்களே.. கதறிய தாய்.!

போரூர்:

திருவேற்காடு குப்புசுவாமி நகர், காடுவெட்டி, ஆவடி மெயின் ரோட்டின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

அம்பத்தூர்:

டி.ஐ.சைக்கிள், அம்பத்தூர் OT, வெங்கடாபுரம், எம்.டி.எச்.ரோடு பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த மகள்.. துடிதுடிக்க கொன்ற தாய்.. இறுதி அவர் என்ன செய்தார் தெரியுமா?

click me!