இனி மாற்றுத்திறனாளிகளும் ஈஸியாக கடற்கரைக்கு செல்லலாம்... நாட்டிலேயே முதன்முறையாக மெரினாவில் புதுவசதி வந்தாச்சு

By Ganesh A  |  First Published Nov 27, 2022, 5:57 PM IST

இந்தியாவில் முதன்முறையாக சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை திறக்கப்பட்டு உள்ளது. 


சென்னையில் உள்ள புகழ்பெற்ற மெரினா கடற்கரையில், மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை அமைக்கட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வந்தது. இத்தனை நாள் மாற்றுத்திறனாளிகளின் கனவாக இருந்த அந்த திட்டம் தற்போது நனவாகி உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை திறக்கப்பட்டு உள்ளது. 

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 1.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. மரத்தால் அமைக்கப்பட்டு உள்ள இந்த நடைபாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... சென்னையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை.. சில மணிநேரத்தில் கொள்ளையர்களை பிடித்தது எப்படி? பரபரப்பு தகவல்.!

India's first ramp for persons with disability and for senior citizens at 's famous , will be inaugurated tomorrow! pic.twitter.com/tsKFXXMYts

— Greater Chennai Corporation (@chennaicorp)

263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நடைபாதை பபூல், சிகப்பு மராந்தி மற்றும் பிரேசிலியன் மரங்களால் கட்டப்பட்டு உள்ளது. வயதானவர்களும் பயன்படுத்தும் வண்ணம் இந்த நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. வயதானவர்கள் பிடித்து நடப்பதற்கு ஏதுவாக இரு புறமும் கைபிடிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

undefined

இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளும், வயதானவர்களும் கடலை அருகில் சென்று ரசிக்க முடியும். தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விடுமுறை தினமான இன்று முதல் இந்த நடைபாதை திறக்கப்பட்டு உள்ளதால் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் ஆர்வத்துடன் வந்து இந்த நடைபாதையை பயன்படுத்தி மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்கள்... வணிகர்களுக்கு அலர்ட்.! கடைகளில் இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கவில்லையா..? எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி

click me!