திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக அந்த ஊர் இளைஞர்கள் சார்பில் வைக்கப்பட்ட ஒரு பேனர் வைக்கப்பட்டது. அதில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா பால் குடம் சுமந்து செல்வது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவிற்கான பேனரில் முன்னாள் ஆபாசப் பட நடிகையான மியா கலீஃபாவின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆடி வெள்ளி அம்மனுக்கு விசேஷமான நாட்கள் ஒன்றாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், சடங்குகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் குருவிமலையில் உள்ள நாகாத்தம்மன், செல்லியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு மின்விளக்குகள் மற்றும் பதாகைகளால் அலங்பகாரம் செய்யப்பட்டது.
undefined
திருவிழாவிற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக அந்த ஊர் இளைஞர்கள் சார்பில் வைக்கப்பட்ட ஒரு பேனர் வைக்கப்பட்டது. அதில் புகழ்பெற்ற ஆபாசப்பட நடிகை மியா கலீஃபா பால் குடம் சுமந்து செல்வது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. கோயிலில் நடக்கும் திருவிழாவில் மியா கலீஃபாவின் படம் எப்படி வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
தமிழுக்கு மரியாதை! பென்ஷன் தொகையை உயர்த்தும் தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?
பேனரில் மியா கலீஃபா படத்துன் இன்னொரு அம்சமும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆதார் அட்டை வடிவில் உள்ளூர் இளைஞர்களின் படங்களும் பேனரில் இடம்பெற்றுள்ளன. இந்த பேனரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து இந்த பேனர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்து சர்ச்சைக்குரிய பேனரை அகற்றியுள்ளனர்.
மியா கலீஃபாவின் படம் பேனரில் பயன்படுத்தப்பட்டது எப்படி என்பது குறித்து உள்ளூர் மக்கள் யாரும் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தவறுதலாக அந்தப் படம் பயன்படுத்தப்பட்டதா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மெர்சிடிஸ்-பென்ஸ் ரகசியம் இதுதான்! பெயருக்குப் பின்னால் உள்ள கதையைப் பகிர்ந்த சிஇஓ!!