விருத்தாசலத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் அரைநிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அளித்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளில் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே பள்ளியின் தலைமை ஆசிரியராக எடில்பட் பிலிப்ஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை உறுதி செய்யும் வகையில், பள்ளியில் கடந்த ஆண்டு படித்த அதே பகுதியைச் சேர்ந்த மாணவியுடன் தலைமை ஆசிரியர் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் தலைமை ஆசிரியரை சந்தித்து விளக்கம் கேட்க முயன்றனர். அப்போது காரில் வந்த தலைமை ஆசிரியரை வழிமறித்த கிராம மக்கள் அவரை அடித்து உதைத்து ஆடைகளை கிழித்தனர்.
அடக்கடவுளே; பள்ளியில் நண்பர்களுடன் ஆசையாக விளையாடிய சிறுவனுக்கு இப்படி ஒரு முடிவா? மாணவர்கள் ஷாக்
பின்னர் அவரை அரை நிர்வாணமாக விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்து தலைமை ஆசிரியரை மீட்ட காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தலைமை ஆசிரியரை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதிக்கு வந்த முன்னாள் பள்ளி மாணவி தலைமை ஆசிரியரை ஏன் கைது செய்தீர்கள்? நான் எனது முழு விருப்பத்துடன் தான் அவருடன் பழகினேன். அவரை நான் காதலிக்கிறேன். அவரை கைது செய்யாதீர்கள் என காவல் துறையினரை பார்த்து உரக்கச் சொன்னார். இதனை கேட்டு உறவினர்களும், காவல் துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவிக்கு தற்போது 18 வயது பூர்த்தி அடைந்துவிட்ட நிலையில், இந்த விவகாரத்தில் என்ன செய்வது என தெரியாமல் காவல் துறையினர் தவிக்கின்றனர்.