சினிமா காட்சியை மிஞ்சிய சேசிங் சம்பவம்; திருப்பூரில் முகம் சிதைக்கப்பட்டு ரௌடி கொடூர கொலை

By Velmurugan s  |  First Published Aug 8, 2024, 7:31 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ரௌடி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனிடையே இன்று காலை திருப்பூர் பல்லடம் சாலையின் கரையான்புதூர் பகுதியில் வினோத் கண்ணனை 4 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் விரட்டிச் சென்றுள்ளது.

சினிமா காட்சியில் வருவது போல் தனி நபரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டிச் செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் நடப்பது என்ன என்று சுதாரிப்பதற்குள் அக்கும்பல் வினோத் கண்ணனை சாலை ஓரமாக வெட்டி வீசினர். ஆத்திரம் அடங்காத கொலை கும்பல் வினோத் கண்ணனின் முகத்தை முழுவதுமாக சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

அடக்கடவுளே; பள்ளியில் நண்பர்களுடன் ஆசையாக விளையாடிய சிறுவனுக்கு இப்படி ஒரு முடிவா? மாணவர்கள் ஷாக்

தகவலின் அடிப்படையில், பல்லடம் டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் முகம் முற்றிலும் சிதைந்து காணப்பட்டதாலும் அவரிடம் எந்தவித ஆவணமும் இல்லாததாலும் அவர் யார் என கண்டறிவதிலேயே காவல் துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. பின்னர் கொலை செய்யப்பட்டது சிவகங்கை மாவட்டம் உடையான்குளம் பகுதியைச் சேர்ந்த வினோத் கண்ணன் தான் என்பதை உறுதி செய்தனர்.

ஆபாச போட்டோசூட்; திருமணம் என்ற பெயரில் மனைவியை கணவனே விபசாரத்தில் தள்ளிய கொடூரம்

இதனைத் தொடர்ந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதியில் காலை நேரத்தில் நிகழ்ந்த கொடூர கொலை சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

click me!