திருப்பூரில் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் மாரடைப்பால் அவதிப்பட்ட நிலையிலும் குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன் (வயது 49). இவர் வெள்ளக்கோவில் அடுத்த அய்யனூர் பகுதியில் செயல்பட்டு வரும் னியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக பள்ளி வாகனத்தை இயக்கும் பணி செய்து வருகிறார். அதன்படி நேற்று மாலை வழக்கம் போல் பள்ளி முடிந்து சுமார் 20 மாணவர்களை வேனில் அழைத்து வந்துள்ளார்.
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்; பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
undefined
மேலும் அதே வாகனத்தில் தான் இவரது மனைவி லலிதாவும், குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இந்நிலையில், வாகனம் வெள்ளக்கோவில் காவல் நிலையம் அருகே திருச்சி, கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் மலையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் வாகனத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வாகனத்தை மிகவும் லாவகமாக சாலையின் ஓரம் பத்திரமாக நிறுத்திய மலையப்பன் தனது இருக்கையில் இருந்து எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் ஸ்டேரிங் மீதே மயங்கி விழுந்துள்ளார். இதனால் வாகனத்தில் பயணம் செய்த மனைவி உட்பட மாணவர்கள் அனைவரும் அலறி துடித்துள்ளனர்.
15 நிமிடத்தில் ரூ.2 லட்சம் கடன் தரும் வங்கி; அந்த பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா?
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் ஏறி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட நபர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தனது உயிர் பிரியும் தருவாயிலும் குழந்தைகளின் பாதுகாப்பை எண்ணிப்பார்த்த ஓட்டுநரின் செயலை எண்ணி குழந்தைகளின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் ஓட்டுநரின் செயலுக்கு இணையத்தில் பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர்.