திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிரிழந்த மூதாட்டியின் உடலை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெண்கள் சுமந்து சென்று தகனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மெட்ரோ சிட்டி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி (வயது 83). இந்திராணி கடந்த 5ம் தேதி வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி உயிரிழந்தார். இவரது உடலை பெண்கள் மட்டும் சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேயிலை தொழிலாளர்களுக்கு நிரந்தர இடம்; கிருஷ்ணசாமியின் எண்ட்ரியால் வழக்கில் திடீர் திருப்பம்
undefined
தமிழகத்தில் பொதுவாக இறுதி ஊர்வலத்தில் பெண்கள் வீதியிலேயே நிறுத்தப்படுவார்கள். இதனை தகர்க்கும் விதமாகவும் பெரியார் செய்த புரட்சியால் பெண்கள் தங்கள் எல்லைகளை கடந்து சாதனை புரிந்து வருகின்றனர் என்பதை உணர்த்தும் வகையில் தாராபுரம் மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது.
2 மகள்கள், மனைவியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம்? கோவையில் பரபரப்பு சம்பவம்
இதில் எவ்வித ஜாதி, மத சடங்குகளும் இன்றி பெண்களே இந்திராணி உடலை சுமந்து சென்று இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டது. திராவிடர் கழக பெரியாரிய உணர்வாளர்கள் இணைந்து இந்த புரட்சிகர இறுதி நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.