திருப்பூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் காவிளிபாளையம் புதூர் பகுதியில் கட்டிட பணி செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 28), சரவணபவன் (28) என்ற இரண்டு இளைஞர்கள் புதூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக அதே பகுதியில் தங்கியிருந்து பணி செய்து வரும் நிலையில், அருகில் இருந்த தண்டவாளத்தை கடந்து சென்று டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மாற்று திறனாளிகள், முதியோர் உட்பட அனைத்து ஓய்வூதியத்தையும் வாரி வழங்கிய ஆந்திரா முதல்வர்
அந்த வகையில், இன்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் இருவரும் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த விரைவு ரயில் மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இப்பகுதியில் தண்டவாளத்தை கடக்க முறையான பாதை இல்லாத சூழலில் பலரும் தங்கள் உயிரை பணயம் வைத்தே தண்டவாளத்தை கடந்து செல்வதாகக் கூறப்படுகிறது. மேலும் உள்ளூர் மக்கள் ரயில் வரும் நேரத்தை கவனத்தில் கொண்டு தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையில், வெளியூர் நபர்கள் கவனக்குறைவாக நடந்து கொள்வதால் அவ்வபோது இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் விபத்துகளை தடுக்க முறையான பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் இடித்து அகற்றம்; போலீஸ் குவிப்பு
வந்திருந்தனர். பணி செய்து வந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து டீ குடிக்க செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் டீ குடிக்க சென்று திரும்பி வரும் போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த ரயில் மோதி இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.