திருப்பூரில் நிலத்தின் உரிமையாளரை கடத்தி அவரிடம் இருந்து நிலத்தை அபகரிக்க முயன்ற பாஜக பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன். இவருக்கு சொந்தமாக தாராபுரம் - பழனி சாலையில் 35 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை தாராபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க வைச் முன்னாள் நிர்வாகியான ஹரி பிரசாத் என்பவருக்கு 2.5 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு பேசி முடிக்கப்பட்டது.
ஹரி பிரசாத் நிலத்தை வாங்க 8.25 லட்சம் ரூபாய் பணத்தை தரணிதரனிடம் கொடுத்த நிலையில் மீதி பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மீதிப் பணத்தை கொடுக்காமல் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்க தரணிதரனை மிரட்டியதுடன், தரணிதரனை தாராபுரத்தில் இருந்து கோவை அழைத்து வந்து ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
எங்கள் தலைவர்களின் செயல்பாடுகளால் பாஜக மிகப்பெரிய அளவி்ல வளர்ந்து வருகிறது - எல்.முருகன்
இது தொடர்பாக தரணிதரன் கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கூட்டு சதி உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தாராபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத், கோவையை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் பாபு ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை; கேமரா இருப்பது தெரியாமல் பணிப்பெண்கள் விபரீத செயல்
இந்த வழக்கில் தொடர்புடைய செந்தில் மற்றும் ஜான்சன் என்ற இருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தாராபுரத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் கோவையைச் சேர்ந்த பாபு ஆகியோர் பாஜக முன்னாள் நிர்வாகிகள் என்பதும், பிரவீன் குமார் அனுமன் சேனா அமைப்பின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருவதும் குறிப்பிடதக்கது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.